குடிபோதையில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி : தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய போலீசார்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முருகன் என்பவர் தீக்குளிக்க முயன்றார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முருகன் என்பவர் தீக்குளிக்க முயன்றார். ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த அவர் குடிபோதையில் மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றி கொண்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முருகனை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் முருகனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். வங்கியில் கடன் கேட்டு தராததால் முருகன் தீக்குளிக்க முயன்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துளளது.
Next Story