சிமெண்ட் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
சிமெண்ட் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தாகியுள்ளது
சிமெண்ட் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், துணை தலைவருமான சீனிவாசன் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக, சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் முன்னணி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து மேற்கொண்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், நாட்டில் உள்ள 21 நிறுவனங்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பள உயர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2022ம் ஆண்டு மார்ச் 31 ந் தேதி வரை மொத்தம் 4 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாய் அதிகமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 26 ஆண்டுகளில் இதுவரை 7 முறை சம்பள உயர்வு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story