நெய்வேலி சுரங்கம் அமைக்கும் பணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் பங்கேற்பு

நெய்வேலி என்எல்சி நிறுவனம் விருத்தாச்சலம் முதல் சேத்தியாதோப்பு வரை மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.
நெய்வேலி சுரங்கம் அமைக்கும் பணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் பங்கேற்பு
x
நெய்வேலி என்எல்சி நிறுவனம் விருத்தாச்சலம் முதல் சேத்தியாதோப்பு வரை மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, என்.எல்.சி நிறுவனத்தின், 2 வது சுரங்கம் அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மூன்றாவது சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக கை விட வேண்டும் என்றார். மேலும், இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் அனைவருமே பிரதமர் மோடி இடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்