ஜாக்டோ ஜியோ போராட்டம் : பள்ளிக்கு வந்த மாணவர்கள் பாதிப்பு

அரசு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஜாக்டோ ஜியோ போராட்டம் : பள்ளிக்கு வந்த மாணவர்கள் பாதிப்பு
x
தஞ்சை

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 808 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு 30 ஆசிரியர்கள் பணிபுரியும் நிலையில், 3 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். மாணவர்களை அவர்களாகவே படிக்கச் சொல்லி ஆசிரியர்கள் அறிவுறுத்தியதால், அவதிக்குள்ளாகினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் டி.புதுப்பட்டியில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் வரவில்லை எனக்கோரி சிறுவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவரை அழைத்து வந்து மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டது. 

திருப்பூர்

திருப்பூர் தேவாங்கபுரம் நடுநிலைப்பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வந்ததை அடுத்து, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், செட்டிபாளையம் ஆரம்ப பள்ளி பூட்டப்பட்டிருந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர், மறியலில் ஈடுபட்டனர். 

நாகை 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தியாகி நாராணயசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால், தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இதேபோல், மயூரநாதர் மேலமட விளாகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி திறக்கப்படாததால், காலை 10 மணி வரை காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்