சென்னையை சுற்றிப்பார்த்து மகிழ்ந்த மனநல நோயாளிகள்

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் சிறப்பு ஏற்பாடு
சென்னையை சுற்றிப்பார்த்து மகிழ்ந்த மனநல நோயாளிகள்
x
226 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மனநலம் குன்றியோர் தங்கி உள்ளனர். குடும்பத்தினரால் கைவிடப்பட்ட அவர்களில் 50 பேரை, காப்பக இயக்குனர் பூரண சந்திரிகா அறிவுரைப்படி , சென்னையை சுற்றிக் காண்பிக்க முடிவு செய்யப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொண்ட குழுவினர் தனியார் பேருந்து மூலமாக பெசன்ட் நகர் கடற்கரை , மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு மனநலம் குன்றியோரை ஒருநாள் சுற்றுலா அழைத்து வந்தனர். கடலில் அவர்கள் குளித்து மகிழ்ந்தனர். சிறுவயதில் கடற்கரைக்கு வந்ததை சிலர் நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். இதுபோன்று, பல முறை குழுவாக சினிமா பார்க்க அழைத்து சென்றுள்ளதாகவும், காப்பகத்தில் உள்ளவர்களும், எங்கள் குடும்ப்பத்தினர் போன்றவர்கள் தான் என்றும், தலைமை செவிலியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்