தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 8-ஆம் கட்ட விசாரணை

"பிப். 18 - 21 வரை விசாரணை நடைபெறும்" - விசாரணை ஆணைய வழக்கறிஞர் தகவல்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 8-ஆம் கட்ட விசாரணை
x
தூத்துக்குடி துப்பாக்கி சூடு  சம்பவம் தொடர்பான 8-ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெறும் என விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 -ம் கட்ட விசாரணையில், இதுவரை 155 பேரிடம் விசாரணை நடைப்பெற்று உள்ளதாகவும், மேலும் 700 பேர் வரை விசாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடைபெறும் எனவும் விசாரணை ஆணைய வழக்கறிஞர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்