மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை - ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் விழாவில், ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்
மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை - ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
x
மதுரையில்  நாளை மறுநாள் நடைபெறும் விழாவில், ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.  இந்த விழாவில், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவ மனைகளில் தலா 150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அதிநவீன மருத்துவ வசதி வளாகங்களையும் பிரதமர் மோடி மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.இந்த விழாவில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்