இனி தமிழகத்தில் எந்த எதிர்க்கட்சியும் தலைத்தூக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி
தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் அ.தி.மு.க. சார்பில் சென்னை கே.கே.நகர். எம்.ஜி.ஆர். மார்கெட் அருகில் நடைபெற்றது.
தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் அ.தி.மு.க. சார்பில் சென்னை கே.கே.நகர். எம்.ஜி.ஆர். மார்கெட் அருகில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சிகள் தூண்டுதல் அடிப்படையிலேயே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடப்பதாக குற்றம் சாட்டினார். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போது அழைப்பு விடுத்தார். அரசுக்கு 100 ரூபாய் வருமானம் வந்தால், ஊதியத்துக்கு 75 ரூபாய் செலவிடுவதாகவும், தெரிவித்த முதலமைச்சர், அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
Next Story