சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக, 15 நாட்களுக்கு, தண்ணீர் திறந்து விட கோரி, தஞ்சாவூர் மாவட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் பெய்த கன மழையால், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். ஆனால் தற்போது நெற்பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் காய்ந்து கருகி வருகிறது. இதனால், மகசூல் குறையும் என்பதால், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story