சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வு : உண்மை தன்மை கண்டறியும் சோதனை
திருவாரூர் தியாகராஜர் கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 3-வது நாளாக ஆய்வு நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் துறை சார்பில் தமிழக கோயில்களில் உள்ள சிலைகளின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் தியாகராஜர் கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 4ஆம் கட்ட ஆய்வை நடத்தி வருகிறது. மத்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர், இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நடந்த ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நாளை வரை இந்த ஆய்வு தொடரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
Next Story