ஜெயலலிதா நினைவு இல்லம் ஆட்சேபம் இல்லை - வருமான வரித்துறை

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் இல்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது
ஜெயலலிதா நினைவு இல்லம் ஆட்சேபம் இல்லை - வருமான வரித்துறை
x
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் இல்லை  என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம்,  நினைவு இல்லமாக மாற்றப்படுவதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவுக்கு 10 கோடி ரூபாய் வரி பாக்கி  உள்ளதாகவும், போயஸ் தோட்டம் உள்ளிட்ட 4 சொத்துக்கள் முடக்கப் பட்டியலில் இருப்பதாகவும், வரிபாக்கியை செலுத்தி விட்டால், போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எந்த ஆட்சேபமும் இல்லை எனவும் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், வரி பாக்கி இருப்பது தற்போது தான் தெரியவந்துள்ளதாகவும், வீட்டை கையகப்படுத்தும் போது, அதற்கான தொகையை மாநில அரசு வழங்கும், அந்த தொகையை வரி பாக்கிக்கு ஈடு செய்து கொள்ளலாம் என்றும்  தெரிவித்தார். இதையடுத்து, முழுமையான அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நிலம் கையகப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்