கனிமொழி முன்னிலையில் கிராமத்தினர் மோதல்

கிராம மக்களை சமாதானப்படுத்திய போலீசார்
கனிமொழி முன்னிலையில் கிராமத்தினர் மோதல்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிராமங்களில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டங்களில் கனிமொழி எம்பி பங்கேற்றார். மேல ஈரால் கிராமத்துக்கு அவர் சென்றபோது, நூறு நாட்கள் வேலை திட்டத்தில் லஞ்சம் வாங்குவதாக கிராம மக்கள் சிலர் புகார் கூறினர். உடனே, அந்த கிராமத்தின் கணக்கர், மைக்கை பறித்து, தன் மீது காழ்ப்புணர்ச்சியில் புகார் கூறுவதாக கூறினார். இதனால், இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவானது. கனிமொழி தலையிட்டும்,  சமாதானமாகாததால், போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்