" தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை " - முதலமைச்சர் பெருமிதம்
தமிழகத்தில் தற்போது வரை புதியதாக தொழில் தொடங்க 500 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர், பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழகம் இருப்பதாகவும், தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். கல்வி, பிற்படுத்தப்பட்டோருக்கான சம உரிமை, சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அவர் கூறினார்.
இங்கு ஒற்றைசாளர முறை கடைபிடிக்கப்படுவதால் தொழில் முனைவோருக்கு சிறந்த பயனாக இருக்கும் என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். அமைதி, வளம், வளர்ச்சி தான் தமிழக அரசின் நோக்கம் என தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவதாக கூறினார்.
Next Story