கீழ்பவானி அணையின் முதல்சுற்று நீர்திறப்பு முடிவு - பிப்ரவரி-1 முதல் 2-ம் சுழற்சி நீர் திறப்பு என அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட முதல் சுற்றுத் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட முதல் சுற்றுத் தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பாசனத்துக்காக கடந்த 7-ம் தேதி முதல் இரட்டைப்படை மதகுகள் வழியாக விநாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி திறக்கப்பட்ட இந்த நீர், முதல் சுழற்சி முடிவடைந்ததால் இன்று நிறுத்தப்பட்டது. இரண்டாம் சுற்று தண்ணீர் பிப்ரவரி 1ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 12 நாட்களுக்கு திறக்கப்பட உள்ளது. அணையின் நீர்மட்டம் 87 புள்ளி 92 அடியாகவும், நீர் இருப்பு 20 டிஎம்சியாகவும் உள்ளது.
Next Story