தனியார் கல்லூரி கட்டண நிர்ணயிக்க குழுவுக்கு எதிராக மனு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

வரும் 31 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தனியார் கல்லூரி கட்டண நிர்ணயக்குழுவுக்கும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.
x
தனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைத்ததை எதிர்த்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக தனியார் கல்லூரிகள் சங்கம் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, கட்டண நிர்ணயக் குழு சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரரின் வாதத்தை ஏற்ற நீதிபதி ராஜா, வரும் 31 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தனியார் கல்லூரி கட்டண நிர்ணயக்குழுவுக்கும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.

* தமிழகத்தில் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுயநிதி வகுப்புகளுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் குழு அமைத்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

* இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மதுரை காமராஜர் பல்கலைக்கழக தனியார் கல்லூரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

* இந்த வழக்கு நீதிபதி ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, எந்த ஒரு நடைமுறையும், விதிமுறைகளையும் அறிவிக்காமல் அமைக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணயக் குழு சட்ட விரோதமானது என மனு தாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

* இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, ஜனவரி 31 ம் தேதிக்குள் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், பல்கலைக்கழக மானியக்குழு, மற்றும் தனியார் கல்லூரி கட்டண நிர்ணயக்குழு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்