தைப்பூசத் திருவிழா : அலங்கார மிதவை சப்பரத்தில் எழுந்தருளிய அம்மன்
தைப்பூசத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி, அந்த கோயிலுக்கு சொந்தமான வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. அலங்கார மிதவை சப்பரத்தில், சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். குளத்தின் நான்கு கரைகளிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசித்தனர்.
சமயபுரம் மாரியம்மனுக்கு ரங்கநாதர் சீர்வரிசை : வடகாவிரி ஆற்றங்கரையில் கோலாகலம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி வடகாவிரி ஆற்றங்கரையில் நடைபெற்றது. பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகள் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அம்பாளுக்கு ரங்கநாதர்கோவில் பட்டு வஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
மகாலிங்க சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா : வெள்ளி ரதத்தில் சுவாமி வீதியுலா
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று இரவு, சுவாமியின் வெள்ளி ரத வீதி உலா நடைபெற்றது. காவிரிக்கரையில் எழுந்தருளிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்னிசைக்கு நடுவே வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.
சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் : அலங்கார மிதவையில் எழுந்தருளிய உற்சவர்
தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடந்தது. அலங்கார மிதவையில் சங்கர ராமேஸ்வரர், அன்னை பாகம்பிரியாள், விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் சுவாமிகள் 4 ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் சிவன் கோயிலை சென்றடைந்தது.
Next Story