மேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு
மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு சார்பில், கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதேபோல், மத்திய அரசும் அவகாசம் கோரியது.இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
Next Story