ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு - பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்
கரூரில் அரசு பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அருகே தோட்டக்குறிச்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 60 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரிந்து வந்த அம்பிகா என்ற ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். 57 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே இருந்தால் கல்வி பாதிக்கப்படும் என கூறிய பெற்றோர், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த போலீசார் பெற்றோரை சமாதானப்படுத்தியதோடு கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Next Story