திருவிடைமருதூர் : மகனை கட்டையால் அடித்துக் கொன்ற தாய்
திருவிடைமருதூர் அருகே குடிபோதையில் இருந்த மகனை அவரது தாயே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள வேப்பத்தூரைச் சேர்ந்த கருப்பையன் என்பவர், கடந்த சில மாதங்களாக மதுவிற்கு அடிமையாக இருந்ததாகவும் குடிபோதையில் பலரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவியும் பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. கருப்பையனின் இரண்டு குழந்தைகளையும் அவரது தாய் மாரியம்மாள் கவனித்து வரும் நிலையில் நேற்று வழக்கம் போல, அவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த கருப்பையன், வீட்டில் இருந்த தனது தாய் மாரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியம்மாள், கட்டையால் தனது மகனை அடித்துக் கொன்றார். பின்னர் இன்று காலையில் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். தாயே மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story