10% இட ஒதுக்கீடு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்

பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு  10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தி.மு.க எம்.பி., ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தது. 

அப்போது ஆஜரான ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞர் வில்சன், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது சமத்துவ உரிமைக்கு எதிரானது என்றும், நிலையற்ற தன்மை கொண்ட பொருளாதாரத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது எனவும் வாதம் செய்தார். 

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மாநிலங்களவையில் சட்டத்தை வீழ்த்த முடியாத காரணத்தால், மனுதாரர் உயர்நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும், தி.மு.க எதிர்க்கட்சி என்பதால் அரசியல் உள்நோக்கத்திற்காக வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் வாதிட்டார்.

மேலும், இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டியது  மாநில அரசு தான் என்றும் மத்திய அரசு தரப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்