மாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் டிசம்பர் மாதம் தொடங்கிய நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது.
மாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - விழாவை ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
x
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில்  டிசம்பர் மாதம் தொடங்கிய  நாட்டிய விழா நேற்று நிறைவடைந்தது. பல்வேறு மாநில கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம், ஒடிசி, குச்சுப்புடி, கதகளி மற்றும் குஜராத்திய கிராமிய நடனங்கள் ஆடினர். இதுதவிர பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது.  ஒரு மாதம் நடந்த நாட்டிய விழாவை, ஒரு லட்சம் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள்  கண்டுகளித்ததாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த இறுதி நாள் நிகழ்வில்,  ஒடிசி மற்றும் கிராமிய நடனங்கள் இடம்பெற்றது.  இதில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு, சுற்றுலாத்துறை இணை இயக்குநர் புஷ்பராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்