பாத்திர வியாபாரிக்குள் ஒளிந்திருக்கும் கவிஞர்...

பாத்திர வியாபாரிக்குள் ஒளிந்திருக்கும் கவிஞரைப் பற்றிப் பார்க்கலாம். இவர் திருப்பூரைச் சேர்ந்தவர்.
x
திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மிதிவண்டியில் எவர்சில்வர் பாத்திரங்களை கட்டிக்கொண்டு வீதி வீதியாக சென்று விற்பனை செய்துவருகிறார். சிறுவயது முதலே தமிழின் மீது ஆர்வம் அதிகம் கொண்ட ஜோதியின் 11 வயதில் அவரது தகப்பனார் இறந்துவிடவே குடும்ப வறுமை காரணமாக திருப்பூரில் நெசவு வேலைக்கு சென்றார்.

பின்னர் தனது மனைவியுடன் பெங்களூரு சென்று அங்கு பட்டு நெசவு தொழில் செய்தார். சிறுவயது முதலே தமிழின் மீது ஆர்வம் கொண்ட அவர், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது எண்ண ஓட்டங்களை கவிதைகளாக எழுதத் தொடங்கினார். கவிதை மட்டுமல்லாது பாடல்களையும் எழுதியுள்ளார் . பெங்களூரில் இருந்தால் பிள்ளைகளுக்கு தமிழ் மறந்துவிடுமோ என்ற அச்சத்தில் மீண்டும், குழந்தைகளோடு திருப்பூரில் குடியேறினார்.

வீதி வீதியாக பாத்திரம் விற்க செல்லும் ஜோதி, தான் பார்ப்பவற்றை ஒரு துண்டு காகிதத்தில் கவிதையாக எழுதிவைக்கும் பழக்கத்தை வைத்திருந்தார். இந்த சூழலில்தான் திருப்பூரை சேர்ந்த கவிஞர் ஒருவரின் அறிமுகம் மூலம் ஜோதியின் கவிதை தொகுப்புகள் ஒரு சாமானியனின் கவிதை என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.

தனது அடுத்த படைப்பினையும் வெளியிட தயாராக இருக்கிறார். ஆனால் பொருளாதார சூழலால் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்