இளநீரை உறிஞ்ச பப்பாளி தண்டு - மாமல்லபுர வியாபாரியின் புதிய முயற்சி

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இளநீர் வியாபாரி ஒருவர் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கு பதில் பப்பாளி தண்டை உறிஞ்சி குழலாக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இளநீரை உறிஞ்ச பப்பாளி தண்டு - மாமல்லபுர வியாபாரியின் புதிய முயற்சி
x
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இளநீர் வியாபாரி ஒருவர் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கு பதில் பப்பாளி தண்டை உறிஞ்சி குழலாக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளை மையமாக வைத்து இளநீர் வியாபாரம் அதிகளவில் நடந்து வந்தது. பிளாஸ்டிக் தடை காரணமாக ஸ்ட்ரா இல்லாததால் இளநீர் விற்பனை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,  மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு அருகில் இளநீர் வியாபாரம் செய்யும் சாலமன் என்பவர் பிளாஸ்டிக் ஸ்ராட்க்கு பதில் பப்பாளி தண்டை உறிஞ்சு  குழலாக வழங்கி இளநீர் வியாபாரம் செய்து வருகிறார் பயணிகள் பலரும் இந்த இயற்கை குழலை விரும்பி இளநீர் குடிக்கின்றனர். இளநீர் வியாபாரத்தில் புதியதை  புகுத்திய சாலமனை மாமல்லபுரம் பேரூராட்சி சுகாதார அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்