காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் : தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆணை

பொங்கல் திருநாளையொட்டி, காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், 3 ஆயிரத்து 186 பேருக்கு, பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் : தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆணை
x
பொங்கல் திருநாளையொட்டி, காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், 3 ஆயிரத்து 186 பேருக்கு, பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்தந்த துறை இயக்குநர்கள், தலைவர்கள் தலைமையில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் அரசு விழாவின் போது, பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதக்கம் பெறுபவர்களுக்கு மாதாந்திர பதக்கப்படியாக தலா 400 ரூபாய், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவள்ளுவர் திருநாள் 2019 விருதுகள் :

திருவள்ளுவர் விருது உள்பட 9 விருதுகளுக்கு, தேர்வானவர்கள் பட்டியலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, திருவள்ளுவர் விருதை அன்வர் பாட்சா பெறுகிறார். தந்தை பெரியார் விருதுக்கு பொன்னையனும், பெருந்தலைவர் காமராசர் விருதுக்கு பழ.நெடுமாறனும், முத்தமிழ் காவலர் விசுவநாதம் விருதுக்கு சூலூர் கலைப்பித்தனும் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு வருகிற 21ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்குகிறார். விருதுடன் தலா ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்படும்.  

Next Story

மேலும் செய்திகள்