3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆணை
பொங்கல் திருநாளையொட்டி, காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், 3 ஆயிரத்து 186 பேருக்கு, பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி, காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், 3 ஆயிரத்து 186 பேருக்கு, பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்தந்த துறை இயக்குநர்கள், தலைவர்கள் தலைமையில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் அரசு விழாவின் போது, பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதக்கம் பெறுபவர்களுக்கு மாதாந்திர பதக்கப்படியாக தலா 400 ரூபாய், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story