தமிழகம் முழுவதும் களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பா நதி அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
x
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பா நதி அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். கடந்த 18 வருடங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் குடியிருந்த பளிகர் இன மலைவாழ் மக்கள் கடந்த 2001-ஆம் ஆண்டு கருப்பா நதி அருகே குடியமர்த்தபட்டனர்.  

* இங்கு 42 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மலையில் உள்ள தேன், காட்டு நெல்லி போன்றவற்றை பறித்து விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் எந்த ஒரு பண்டிகையும் கொண்டாடுவதில்லை. இவர்கள் பொங்கல் பண்டிகை  கொண்டாட கடந்த 2 வருடங்களாக சமூக அமைப்புகளும், புளியங்குடி காவல் துறையினரும் இணைந்து பல்வேறு உதவிகள் செய்து அவர்களோடு பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக மும்மதத்தினரும் இணைந்து, மலைவாழ் மக்களோடு பொங்கலிட்டு கொண்டாடினர்.

சிறை காவலர்கள் கொண்டாடிய பொங்கல் விழா : குடும்பத்துடன் கொண்டாடிய சிறை காவலர்கள்

மதுரை மத்திய சிறை காவலர்கள் குடும்பத்துடன் டிஐஜி சமத்துவ பொங்கல் கொண்டாடினர், மதுரை மத்திய சிறைச்சாலை காவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் விழா தமிழக சிறைத் துறை சார்பாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில்  பணியாற்றும் சிறைக் காவலர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

* இந்த நிகழ்ச்சியின்போது குழந்தைகளுக்கு கோலப்போட்டி விளையாட்டு போட்டிகள் மற்றும் பொங்கல் வைத்து சிறைத் துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் டிஐஜி பழனி அவர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர், இந்த சமத்துவ பொங்கல் விழாவில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சிறை கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர், இதுமட்டுமல்லாமல் சிறைத்துறையை சேர்ந்த பணியாளர்களும் குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பாக கொண்டாடினர்.

தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் : வண்ண கோலங்கள் இட்டு அசத்திய பெண்கள்

* தைத்திருநாளான தமிழர் திருநாளையொட்டி நெல்லையில் திமுக சார்பில் சமத்துவப்பொங்கலிட்டு கோலம் போட்டிகள் நடத்தப்பட்டது வெற்றி பெற்றவர்களுக்கு பிரோ,மிக்சி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில்  திரளான பெண்கள் கலந்து கொண்டனர். தைத்திருநாளான தமிழர் திருநாள் வரும் 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லையில் மத்திய மாவட்ட திமுக சார்பில் நெல்லை பாளையங்கோட்டை ராமர் கோவில் திடலில் சமத்துவப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

* இதற்காக மைதானத்தில் கரும்புகள் தோரணம் கட்டப்பட்டு 11 பானை வைக்கப்பட்டு புத்தரிசியிட்டு பொங்கலிடப்பட்டது. இதில் திமு மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் கலந்து கொண்டு பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவையொட்டி பெண்களுக்கு கோலப்போட்டியும் நடைபெற்றது.இந்த போட்டியில் பல வண்ண பொடிகளில் கோலமிட்டது பார்வையாளர்களை கவர்ந்தது. விழாவின் இறுதியில் கோலப்போட்டியை பார்வையிட்ட விருந்தினர்கள் அதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசு வழங்கினார். முதல் பரிசாக 5 அடி பீரோவும் ,இரண்டாம் பரிசாக மிக்சியும் வழங்கபட்டது. 

* இதுபோன்று பாளையங்கோட்டை சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் சமத்துவப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமிப்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்