வழக்கமான உற்சாகத்துடன் இன்று போகி கொண்டாட்டம்...

சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை தடுக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அதிரடி சோதனை.
x
போகிபண்டிகை  கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், காகிதப் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் ஆகியவற்றை எரிப்பதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சென்னை நகர் முழுவதும் 30 குழுக்காக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு போகி பண்டிகையின் போது காற்றின் மாசு  386 கன மீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது. இந்தாண்டு காற்று மாசுவை  குறைக்கும்  வகையில் நள்ளிரவு முதல் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்