100 வயதை கடந்த மூதாட்டியின் பிறந்தநாள் விழா

ஈரோடு மாவட்டம் கோபி அருகே 100 வயதான மூதாட்டி, தனது கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.
x
ஈரோடு மாவட்டம் கோபி அருகே 100 வயதான மூதாட்டி, தனது கொள்ளுப் பேரக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.  

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்பது அருகி, முதியவர் இல்லங்கள் அதிகரித்து வரும் நிலையில், 100 வயதை கடந்த மூதாட்டிக்கு தலைமுறைக் குழந்தைகள் ஒன்றாகக் கூடி பிறந்தநாள் கேக் ஊட்டியது, நவீன காலத்தின் நம்பமுடியாத உண்மை.
   
கோபி அருகேயுள்ள நன்செய்புளியம்பட்டியில் தமது 3 மகன்களுடன் வசித்து வருகிறார் மூதாட்டி ராமக்காள். ராணுவ வீரரான இவரது கணவர் 23 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட, மகன்களே பாதுகாப்பு அரண். மகன்களின் 6 மகள்கள், 2 மகன்கள் என 8 பேரக் குழந்தைகளும் வேலை நிமித்தமாக சென்னை, கோவை, பெங்களூரு என வெளியூர் சென்றுவிட்டனர். எனினும், ராமக்காள் 100 வயதை கடந்த தகவல் அறிந்து பரவசமடைந்தனர். உடனடியாக சொந்த ஊர் திரும்பிய அவர்கள், மூதாட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

மாமியார் ராமக்காளுக்கு கேக் ஊட்டிய மருமகள்கள், முத்தமழை பொழிந்த கொள்ளுப் பேரக்குழந்தைகள், பலூன்களை பறக்கவிட்ட பேரன்கள் என பாட்டியை மையப்படுத்தி உறவுகள் ஒன்று சேர்ந்த நிகழ்வு, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.  

தலைமுறைகளை கடந்த மூதாட்டியின் வாழ்த்து மட்டுமே தங்களுக்கு வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளது, தாய் உள்ளிட்ட உறவுகளை ஒதுக்குவோர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

Next Story

மேலும் செய்திகள்