கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - கரும்பு விவசாயிகள்

தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு வெட்டும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
x
தஞ்சை மாவட்டத்தில்  பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு வெட்டும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பனந்தாள், திருவையாறு, அம்மாபேட்டை, பாபநாசம், பூதலூர் ஆகிய வட்டாரங்களில் ஏறத்தாழ சுமார் 200 ஏக்கர் பரப்பளவில்  கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் வெட்டும் பணி தீவிரமடைந்துள்ளது. ஆனால் கரும்புகளை மிகக்குறைவான விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கரும்பு ஒன்று 10 முதல் 12 ரூபாய்க்கு மட்டுமே வாங்கப்படுவதாக அவர்கள் கூறினர். கரும்பு முழுவளர்ச்சி அடையும் நேரத்தில் கஜா புயல் தாக்கியதில் கரும்புகள் முற்றிலும் வேரோடு மண்ணில் சாய்ந்ததாகவும் அவர்கள் கூறினர். 


Next Story

மேலும் செய்திகள்