போகி கொண்டாட்டம் : " பழைய பொருட்களை தீ வைத்து எரிக்காதீங்க" - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதனை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் போகிப்பண்டிகை, கொண்டாடப்பட்டு வருகிறது.
போகி கொண்டாட்டம் :  பழைய பொருட்களை தீ வைத்து எரிக்காதீங்க - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்
x
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதனை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் போகிப்பண்டிகை, கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான போகிப்பண்டிகை, வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அப்போது, பழைய பொருட்களையும் பிளாஸ்டிக் பொருட்களையும் யாரும் தீ வைத்து கொளுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்