நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் - ராமதாஸ்
டெல்டா மாவட்டங்களில் போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல்லை விற்க முடியாமல் உழவர்கள் தவித்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
* டெல்டா மாவட்டங்களில் போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல்லை விற்க முடியாமல் உழவர்கள் தவித்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
* இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் குறைவாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
* மேலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்கி உழவர்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வகை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story