அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் மணல் குவாரிக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

கரூர் மாவட்டம் மேலப்பாளையம், அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் மணல் குவாரிக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு
x
கரூர் மாவட்டம் மேலப்பாளையம், அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் சாணப்பிரட்டி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், அமராவதி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டு காரணமாக ஏற்கனவே மணல் அளவு குறைந்திருப்பதாகவும், ஆனால், முறையாக ஆய்வு செய்யாமல் மணல் குவாரி நடத்த  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.. அந்த பகுதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தாத நிலையில், அவசரகதியில் அனைத்து சான்றிதழ்களும் பெறப்பட்டு மணல் குவாரி நடைபெற்று வருவதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, குவாரி செயல்பட இடைக்கால தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்