பொங்கல் பரிசு தொகை ரூ.1000 சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் வழங்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

சர்க்கரை அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாயை வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் அரசு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வேண்டாம் என பெறப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி  தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 40 சதவீதம் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களுக்கும் வழங்கலாம் என உத்தரவிட்டனர். தற்போது ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்ற நிலையில் அரிசிக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயிக்காமல் இலவசமாக வழங்குவது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இலவசங்களை அனைவருக்கும்  வழங்க கூடாது என முடிவெடுங்கள் எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்