மத்திய மாநில அரசுகளை கண்டித்து நூதன போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் விவசாயிகள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து, நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் விவசாயிகள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து, நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காதில் பூ வைத்தும் ஜால்ரா அடித்தும் விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆளுநர் உரையில், மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதை, மத்திய அரசுக்கு ஜால்ரா அடிப்பதாகவும், கஜா புயலுக்கு நிவாரணம் வழங்காததை, மக்களின் காதில் பூ வைப்பதாகவும் விமர்சித்து, இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Next Story