வெளிநாடு செல்ல மறுத்த மைத்துனர் கொலை
வெளிநாடு செல்ல மறுத்த சகோதரி கணவனை, கார் விபத்து மூலம் மைத்துனர்களே கொலை செய்த சம்பவம் சென்னை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* சென்னை ஆவடியில் முபாரக் அலி என்பவர் டைலர் தொழில் செய்து வந்தார். கடந்த அக்டோபர் 10-ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது கார் ஒன்று மோதியது. மீட்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி 4 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். ஆனால், போலீசாரின் விசாரணையில் இது விபத்தல்ல, திட்டமிட்ட சதி என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
* துபாயில் இருந்து ஊர் திரும்பிய முபாரக் அலி மீண்டும் வெளநாடு செல்ல மைத்துனர்கள் விசா ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து கணவன்- மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்டு சமாதானம் செய்யவந்த மனைவியின் சகோதரர்கள் வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்தியுள்ளனர்.
* இருதரப்புக்குமான வாக்குவாதம் முற்றியதில், மைத்துனர்களின் காரை முபாரக் அலி கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கோபத்துடன் மோட்டார் சைக்கிளில் வெளியேறிய முபாரக் அலியை பின்தொடர்ந்த மைத்துனர்கள், தங்களது காரால் மோதி தள்ளியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முபாரக் அலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
* இதில், சதக்கதுல்லாவை கைது செய்த போலீசார், மற்றொரு மைத்துனர் அப்துல் ரகுமானை தேடி வருகின்றனர்.
Next Story