நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கோரிக்கை
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிரதான கோரிக்கைகளில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் அடங்கும்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிரதான கோரிக்கைகளில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் அடங்கும். இதுபோல, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டும் என்பதும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதுடன், குறைந்த பட்ச மாத ஊதியத்தை 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசு பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனையை கைவிட வேண்டும் என்றும், வங்கித் துறையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பதும் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதுடன், வாராக் கடன்களை வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
Next Story