பிளாஸ்டிக் தடைக்கு எதிராக வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்...

பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
x
சிறு, குறு வணிகர்கள் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக சட்டப்பேரவையை முற்றுகையிட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் பேரணியாக செ​ன்றனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பியபடி வந்த அவர்களை வாலாஜா சாலையில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ​பேசிய  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பெரிய வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்காதது வணிகர்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது என தெரிவித்தார். இந்த தடை தொடர்ந்து அமலில் இருந்தால், மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தை பொங்கலுக்கு முன்பே நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்