ரஜினி மக்கள் மன்ற வாட்ஸ்-அப் குழுக்களில் உள்ளவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்ற வாட்ஸ்-அப் குழுக்களில் உள்ளவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்
x
ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ்-அப் குழுக்களில், அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே உறுப்பினராக இருக்க வேண்டும். பிற மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் யாரேனும் குழுவில் இருந்தால், அந்த வாட்ஸப் குழுவின் அட்மின் உடனடியாக அவர்களை நீக்க வேண்டும். மனதிற்கு தோன்றும் பெயர்களை எல்லாம் அதிகாரப்பூர்வ குழுக்களுக்கு வைக்கக்கூடாது. ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில்  மட்டும் தான் இருக்க வேண்டும். மன்றத்தை விட்டு நீக்கப்பட்டவர்களை ரஜினி மக்கள் மன்றத்தின் எந்த வாட்ஸப் குழுவிலும் சேர்க்கக்கூடாது. மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் உருவாக்கும் குழுக்களில் உறுப்பினர்கள் யாரும் இருக்க கூடாது. இவ்வாறு, ரஜினி மக்கள் மன்றத்தின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்