ஜல்லிக்கட்டின் போது வீரர்கள் உயிரிழந்தால் நிவாரணம் வழங்குவது யார்...? - சென்னை உயர் நீதிமன்றம்
ஜல்லிக் கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு உயிரிழப்போருக்கு இழப்பீடு வழங்குவது யார்? என்பது குறித்து, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள், சாதி ஆதிக்க விளையாட்டாக மாறிவிட்டதாகவும், ஜல்லிகட்டு குழுக்களில் இதர சாதியினர் புறக்கணிக்கப்படுதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
* வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, ஜல்லிக்கட்டு குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு எனக் குறிப்பிட்டது.
* ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைபவர்களுக்கும், உயிரிழப்போருக்கும், யார் இழப்பீடு வழங்குவது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இழப்பீடு குறித்து வரும்18-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Next Story