பாம்பன் பாலத்தில் சோதனை ரயில் ஓட்டம் - பழுது நீக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை
பாம்பன் பாலத்தில் பழுது சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, சோதனை ரயில் ஒட்டம் நடத்தப்பட்டது.
பாம்பன் பாலத்தில் பழுது சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, சோதனை ரயில் ஒட்டம் நடத்தப்பட்டது. கடந்த மாதம், பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக, ராமேஸ்வரத்துக்கு செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகளும், வடமாநில பக்தர்களும், கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில், 35 நாட்களுக்கு பிறகு, அங்குள்ள தூக்குப் பாலத்தில் பழுது நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் பயணித்த வல்லுனர் குழு அளிக்கும் அறிக்கையை தொடர்ந்து, பாம்பன் பாலத்தில் மீண்டும் ரயில் இயக்கப்படுவது குறித்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story