திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அறிக்கையை இன்று அனுப்புகிறார் சத்யபிரதா சாஹூ...
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கஜா புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதால், திருவாருரில் தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா? என்பது குறித்து, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் நிர்மல்குமார் ஆலோசனை நடத்தினார். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில், பங்கேற்ற பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள், திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கள நிலவரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் நிர்மல் குமார், தமது பரிந்துரைகளை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு அனுப்பி வைத்தார். இதனை பரிசீலித்த சத்திய பிரதா சாஹூ, திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இன்று அனுப்பி வைக்கிறார்.
Next Story