இந்திய பெற்றோரை தேடி அலையும் டென்மார்க் பிள்ளை
பெற்றோரை இரக்கமின்றி முதியோர் இல்லத்தில் தவிக்கவிடும் இந்த காலத்தில் டென்மார்க்கை சேர்ந்த ஒரு நபர் தன் பெற்றோரை தேடி கோவைக்கு வந்துள்ளார்.
பெற்றோரை இரக்கமின்றி முதியோர் இல்லத்தில் தவிக்கவிடும் இந்த காலத்தில் டென்மார்க்கை சேர்ந்த ஒரு நபர் தன் பெற்றோரை தேடி கோவைக்கு வந்துள்ளார். டென்மார்க்கை சேர்ந்தவர் கேஸ்பர் ஆண்டர்சன். 43 ஆண்டுகளுக்கு பின் தன் தாய் தந்தையை தேடி கோவை வந்துள்ளதாக கூறும் இவர், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தொண்டாமுத்தூர் லிங்கனூர் பகுதியை சேர்ந்த அய்யாவு, சரஸ்வதி ஆகியோரின் மகனாகிய தான் டென்மார்க் தம்பதியினருக்கு 4 வயதில் வறுமை காரணமாக தத்து கொடுக்கப்பட்டதாக கூறினார். தற்போது பெற்றோரை தேடி கோவை வந்துள்ள அவரின் இயற்பெயர் ராஜ்குமார் என்றும், 1978 ஆம் ஆண்டு தத்து கொடுக்கப்பட்டதற்கான நீதிமன்ற ஆவணத்தில் தன்னுடைய சிறுவயது புகைப்படம் உள்ளதாகவும் ஒரு போட்டோவை ஆதாரமாக சுட்டிக்காட்டினார். புனேவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கோவை வந்த அவர், தன் பெற்றோர் குறித்து தகவல் தெரிந்தால் ஊடகத்தின மூலமாக தன்னை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.
Next Story