தமிழகம் முழுதும் 2- நாள் டாஸ்மாக் கடை அடைப்பு : பணி நிரந்தரம் கோரி போராட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் ராஜவேல், 2003-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களை இன்றுவரை பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்றார். நிறுத்தப்பட்ட ஊக்கத் தொகையை நிலுவையுடன் வழங்குதல், ஏற்புடைய பணிமாறுதல், பணிபாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8,9 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறினார். 27 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்பதால், 6 ஆயிரம் கடைகள் 2 நாட்கள் மூடப்பட உள்ளது, மதுப் பிரியர்கள் மற்றும் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story