புத்தாண்டு, பொங்கல் பரிசு பெற்ற விவகாரம் : சித்த மருத்துவ அலுவலர் மீது வழக்கு பதிவு
ராமநாதபுரத்தில், மருத்துவர்களிடம் பொங்கல் மற்றும் புத்தாண்டு பரிசு பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக சித்த மருத்துவ அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில், மருத்துவர்களிடம் பொங்கல் மற்றும் புத்தாண்டு பரிசு பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக சித்த மருத்துவ அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராக பணியாற்றி வரும் பார்த்திபன் என்பவர், தமக்கு கீழ் பணியாற்றும் மருந்துவர்களிடம் பொங்கல் பரிசு வழங்குமாறு நிர்பந்தப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் சித்த மருந்து அலுவலர் பார்த்திபன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 கிராம் தங்க நாணயம், வெள்ளி காப்பு உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
Next Story