அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - பேச்சுவார்த்தை தோல்வி
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியில் அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொள்ள கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கூறியுள்ளார்.
Next Story