முகநூல் மூலம் காதல் மணம் புரிந்தவர் மீது புகார்...

முகநூல் முலம் அறிமுகமாகி காதல் திருமணம் செய்து கொண்ட கணவர், வேறு ஓரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முகநூல் மூலம் காதல் மணம் புரிந்தவர் மீது புகார்...
x
திருவண்ணாமலையை சேர்ந்த சித்ரா என்பவர், தனது கணவரை இழந்த நிலையில்,  ஜீவனா மற்றும் ஷஞ்சனா என்ற பெண் குழந்தைகளுடன் வசித்த வந்தார். இந்நிலையில், முகநூலில் அறிமுகமாகிய ராணுவ வீரர் ஸ்ரீராம் என்பவரை, கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.  தற்போது காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த சித்ரா, ஸ்ரீராம் மீது புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தம்மை ஏமாற்றி விட்டு வேறு ஓரு பெண்ணை ஸ்ரீராம் திருமணம் செய்ய உள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்தி கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் சித்ரா மனுவில் கோரியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்