விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - 300 பேர் கைது

விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
x
விளை  நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள்  கைது  செய்யப்பட்டனர். விளைநிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 13 மாவட்ட விவசாயிகள், சென்னை தலைமை செயலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணியுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, முதலமைச்சர் தலையிடக்கோரி, சென்னை சேப்பாக்கத்தில்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று 
இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு போலீசார் 
அழைத்து சென்றனர். கோட்டையை நோக்கி செல்ல இருந்த தங்களை போலீசார் கைது செய்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்