பாதுகாப்பான ரத்த மாற்று சிகிச்சை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு

ரத்த மாற்று சிகிச்சையை பாதுகாப்பானதாக மேற்கொள்ள, தேவையான உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பான ரத்த மாற்று சிகிச்சை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு
x
ரத்த மாற்று சிகிச்சையை பாதுகாப்பானதாக மேற்கொள்ள, தேவையான உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையை சேர்ந்த அப்பாஸ் மந்திரி என்பவர் ரத்த மாற்று சிகிச்சை தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

பாதுகாப்பான முறையில் ரத்தம் மாற்று செய்வதற்கான உபகரணங்களை வழங்கவும், தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். 

மேலும், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ரத்தம் வழங்குவதற்கு பதிலாக ரத்தம் வழங்குமாறு உறவினர்களை வற்புறுத்தக் கூடாது என மாநில ரத்தமாற்று கவுன்சில் அறிவித்துள்ளது என்றும் ஆனால் பல மருத்துவமனைகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவது இல்லை என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டி இருந்தார். 

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக  பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என்றும், ரத்த மாற்று சிகிச்சை மூலமாக எச்.ஐ.வி. பரவுவதைத் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவும், 

ரத்த மாற்று சிகிச்சையை பாதுகாப்பானதாக மேற்கொள்ள தேவையான உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தவும், 

மக்களின் நலன் கருதி தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பனதாக பெற முறையான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.  

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, சுகாதாரத்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்