ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் படகு

ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று, நள்ளிரவில் கரை ஒதுங்கியது
ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் படகு
x
ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று, நள்ளிரவில் கரை ஒதுங்கியது. இதுபற்றி மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், மத்திய மாநில உளவு பிரிவு போலீசார், அங்கு விரைந்து சென்றனர். அந்த படகில் இருந்த மீன்பிடி வலை, மண்ணெண்ணை கேன் மற்றும் சுசுகி இஞ்சினை கைப்பற்றிய போலீசார், இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த அந்த படகில் கடத்தல் நபர்கள் வந்தனரா அல்லது காற்றின் காரணமாக படகு கரை ஒதுங்கி இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கரை ஒதுங்கியுள்ள படகு, இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்களுடையது என இலங்கை வடமாகாண கடல்தொழில் இணையத்தின் தலைவர் ஆலம் உறுதிப்படுத்தியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்