பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக வேதனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் 13 தொகுதிகளில், 9 தொகுதி விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்துவருகின்றனர். ஆனால் , இந்தாண்டு பருவ மழை பொய்த்துப்போனதால், நிலத்தடி நீர் மிகவும் குறைந்துள்ளதாகவும், போர் போட்டாலும், போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக குழாய்களில் வரும் குறைவான நீரை, பாத்திரங்களில், எடுத்து நிலத்திற்கு ஊற்றி, கடலை விவசாயம் செய்வதை காணமுடிகிறது. கஜா புயல் தாக்கத்திற்கு பின், முறையாக மின்சாரமும் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டும் மக்கள்,இதனால் கிடைக்கும் சில சொட்டு தண்ணீர் கூட கிடைப்பதில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story